"அப்பொழுது
தொழுநோயாளர் ஒருவர் வந்து
அவரைப் பணிந்து,
“ஐயா,
நீர்
விரும்பினால் எனது நோயை நீக்க
உம்மால் முடியும்” என்றார்.
இயேசு
தமது கையை நீட்டி அவரைத்
தொட்டு,
“நான்
விரும்புகிறேன்,
உமது
நோய் நீங்குக!”
என்று
சொன்னார்.
உடனே
அவரது தொழுநோய் நீங்கியது.“
- மத்தேயு
8 : 2,3 -
ஏசுவால்
முடியும் என்று நம்புகிறோம்.
ஆனால்
அதைச் செய்ய அவர் ஆவலாய்
இருக்கிறார்,
விருப்பமாயிருக்கிறார்
என்று நம்புகிறோமா?
ஏசுவால்
குணப்படுத்த முடியுமென்று
அந்த தொழுநோயாளிக்கு சந்தேகமில்லை
ஆனால் அவருக்கு விருப்பமுள்ளதா
என்பதில் மட்டுமே சந்தேகம்.
ஏசு சர்வவல்லவர்
என்பதை அவன் நம்பினான்.
ஆனால்
அவர் பாசமுள்ள இதயம் உடையவர்,
அவன் மீது
தகுதியற்ற தயவை பாராட்டுகிறவர்
என்பது அவனுக்கு தெரியாது.
நாமும்
தொழுநோயாளியைப் போல் ஏசுவை
சரியாக புரிந்து கொள்ளாமல்
இருக்கிறோமா?
ஏசு தமது
கையை நீட்டி அவனைத் தொட்டு
"நான்
விரும்புகிறேன் உமது நோய்
நீங்குக"
என்றார்.
ஏசு
குணமாக்க அதிக ஆவலாயிருக்கிறார்.
ஏசு தமது
கையை நீட்டி தொழுநோயாளியை
கனிவாய் தொட்டார்.
அவர்
தொட்டது தொழுநோயை குணப்படுத்த
மட்டுமல்ல,
பல ஆண்டுகளாய்
எல்லாராலும் ஒதுக்கிவைக்கப்பட்டு,
யாரும்
தொடவிரும்பாத சரீரத்தினால்
மனம் நொந்து காணப்பட்ட அவனின்
மனக்காயங்களை குணப்படுத்தவே
அவர் பாசத்தோடு தொட்டார்.
இயேசு
கிறிஸ்து நேற்றும் இன்றும்
என்றுமே மாறாதவர்.(எபிரேயர்
13:8). எதற்கெல்லாம்
ஒரு விடுதலை வேண்டுமென்று
நாம் அவரை நம்புகிறோமோ,
அதற்கான
விடுதலை தர ஏசு மிகவும்
விருப்பமுடையவராக,ஆவலுள்ளவராக
இருக்கிறார்.
நம்மீது
அவர் வைத்துள்ள பாசம்
அளவிடமுடியாதது.
தகுதியில்லாத
நம்மீது அவர் பாராட்டும்
கிருபை மிகப் பெரியது.
ஆகையால்
அவர் பாசமுள்ள இதயம் உடையவர்,
நம்மீது
தகுதியற்ற தயவை பாராட்டுகிறவர்
என்பதை நம்பி அவரின் பாசம்
மற்றும் கிருபையினால்
நிரப்பப்படுவோம்!
தியானிப்போம்
!