"உங்களில்
எந்த மனுஷனானாலும் தன்னிடத்தில்
அப்பத்தைக்கேட்கிற தன்
மகனுக்குக் கல்லைக்
கொடுப்பானா?
மீனைக்கேட்டால் அவனுக்குப் பாம்பைக்கொடுப்பானா?
ஆகையால், பொல்லாதவர்களாகிய நீங்கள் உங்கள் பிள்ளைகளுக்கு நல்ல ஈவுகளைக் கொடுக்க அறிந்திருக்கும்போது, பரலோகத்திலிருக்கிற உங்கள் பிதா தம்மிடத்தில் வேண்டிக்கொள்ளுகிறவர்களுக்கு நன்மையானவைகளைக் கொடுப்பது அதிக நிச்சயம் அல்லவா?” - மத்தேயு 7 : 9 - 11

-
நமது கர்த்தரை எப்படி புரிந்து கொண்டுள்ளோம்? நல்ல தகப்பனாகவும், நல்ல கடவுளாகவும் புரிந்து கொண்டுள்ளோமா?
-
மேற்குறிப்பிட்ட வசனத்தில் ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து இதை புரிய வைக்க ஒரு எளிய கேள்வியைக் கேட்கிறார்.பொல்லாத சிந்தையுள்ள பூமியிலுள்ள தகப்பனே தங்கள் பிள்ளைகளுக்கு நல்லதை கொடுக்க அறிந்திருக்கும்போது நம்மை நேசிக்கும் பரலோகப்பிதா மேன்மையானதை கொடுக்கமாட்டாரா?
-
நம்மிடம் காண்பிக்கும் அவரின் கனிவான இரக்கத்தையும்,பாசத்தையும் பற்றி தியானிப்போம்.
-
கர்த்தர் எனக்கு நல்ல தகப்பன் என்பதை நம் இதயத்தில் பதித்து வைப்போம்.
-
இன்று நமக்கு என்ன தேவை என்றாலும் இப்போதே அவரிடம் கேட்போம்.
-
அப்படி நாம் கேட்கும் போது அதைப் பார்த்து அவர் மகிழ்ந்து தமது நேசப்பிள்ளைக்கு சிறந்ததை தந்து ஆசீர்வதிப்பார்.